ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்பவர்களுக்கு மருந்து தொகுப்பு : என்னென்ன மருந்துகள் உள்ளன? முழு விபரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2022, 9:40 am
RTPCR - Updatenews360
Quick Share

சென்னை : ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு ஏற்பாடு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகம் முழுவதும் நேற்று 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று மட்டும் 8978 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் மருந்து தொகுப்பு தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து காத்திருப்போருக்கு முடிவுகள் வரும் முன்னே மருந்து தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அந்த வகையில்,வைட்டமின் சி,ஜிங்,பாராசிட்டாமல் உள்ளிட்ட மாத்திரைகள்,கபசர குடிநீர்,3 அடுக்கு கொண்ட முகக்கவசம் போன்றவை தரப்படுகின்றன.

அதேசமயம், சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்துதலில் இருப்போருக்கும் மருந்து தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 310

0

0