சொகுசு கப்பலில் போதை பார்ட்டி : நடுக்கடலில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகனிடம் விசாரணை.. பரபரக்கும் பின்னணி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2021, 11:40 am
Shahrukh Son Arrest - Updatenews360
Quick Share

சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை கடல்பரப்பில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டி நடைபெற்ற விவகாரத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் முதல் சொகுசு கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது.

இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் அந்தக் கப்பலில் ஏறினர்.

கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ‘ஃபேஷன் டிவி இந்தியா’ இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றதுல் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் சிக்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்யன் கான் உட்பட 8 பேரிடம் போலுசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 652

0

0