டெல்லி பல்கலைக்கழக மாணவர் அடித்துக் கொலை..! இஸ்லாமிய பெண்ணை காதலித்ததால் நேர்ந்த கொடூரம்..!

Author: Sekar
10 October 2020, 12:02 pm
Delhi_University_student_death_Updatenews360
Quick Share

ஆதர்ஷ் நகரில் வேறு மதத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் ஏற்பட்ட காதல் விவகாரம் தொடர்பாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். மேலும் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியையும் வழங்கி வந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், 18 வயது இளைஞருக்கு கல்வி தொடர்பாக அழைப்பு வந்ததாகவும், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குறுகிய பாதையில் ஒருவரை சந்திக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறியதாக தெரிவித்தனர். பின்னர் அவர் இளம் பெண்ணின் சகோதரருடன் வந்த 7-8 நபர்களால் தாக்கப்பட்டார். 

மயக்க நிலையில் இருந்த ராகுல் உடனடியாக பிஜேஆர்எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் உடலில் எந்தவிதமான காயமும் காணப்படவில்லை.

இந்த சம்பவம் அக்டோபர் 7’ஆம் தேதி நடந்தது.

“உயிரிழந்த இளைஞனும் அந்த பெண்ணும் ஒன்றாகப் படித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணின் சகோதர் வெளியில் எங்காவது இருவரையும் ஒன்றாக பார்த்திருக்கலாம். ஆத்திரத்தில், அவர் மற்ற சிலருடன் சேர்ந்து என் மகனை அடித்தார். எங்களுக்கு நீதியைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை” என்று ராஜ்புத்தின் தந்தை கூறினார்.

“நான் அந்த இடத்தை அடைந்தபோது, ​​அவரது உடைகள் கிழிந்திருப்பதைக் கண்டேன். அவரது முகம் சிவந்திருந்தது, கண்கள் மற்றும் உதடுகள் அனைத்தும் வீங்கியிருந்தன” என்று ராகுலின் உறவினர் கூறினார்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மன்வர் உசேன், முகமது அஃப்ரோஸ் மற்றும் சர்பராஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Views: - 48

0

0