மும்பையை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்..! நான்கு நாட்களில் ஐந்தாவது முறை..!

7 September 2020, 9:54 am
Earth_Quake_Updatenews360
Quick Share

ரிக்டர் அளவுகோலில் 3.5 என்ற அளவிலான லேசான பூகம்பம் இன்று காலை 8 மணியளவில் மும்பையில் ஏற்பட்டது. மும்பைக்கு வடக்கே 102 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது. இன்று காலை மும்பை நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர் இழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

“பூகம்பத்தின் ரிக்டர் அளவு: 3.5, 07-09-2020, 08:07:19 இந்திய நேரம், Lat: 19.99 & Long: 72.80, ஆழம்: 5 கி.மீ, இருப்பிடம்: மும்பையிலிருந்து 102 கி.மீ என்.” என தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக சனிக்கிழமை, மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் நான்கு குறைந்த அளவிலான பூகம்பங்கள் ஏற்பட்டன. வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதல் 4.0 ரிக்டர் அளவிலான பூகம்பம் தஹானு தாலுக்காவில் இரவு 11.41 மணிக்கு உணரப்பட்டது. அதே நேரத்தில் 3.6 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் அதிகாலை 12.05 மணிக்கு தலசாரி தாலுக்காவிலும், கடைசியாக 2.7 ரிக்டர் அளவில் காலை 6.36 மணிக்கும் பதிவு செய்யப்பட்டது என பால்கர் மாவட்ட பேரழிவு கட்டுப்பாட்டு குழுவின் தலைவர் விவேகானந்த் கதம் கூறினார்.

மஹாராஷ்ட்ராவில் தொடர்ச்சியாக ஐந்து முறை நிலநடுக்கங்களை உணர்வது மக்களிடையே சற்று பீதியை உருவாக்கியுள்ளது. ஆனால் இதில் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என நிலநடுக்கவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Views: - 0

0

0