175 கோடி ரூபாய் பண மோசடி..! சிவசேனா எம்எல்ஏவின் நெருங்கிய உதவியாளர் கைது..! அமலாக்கத்துறை அதிரடி..!

26 November 2020, 11:35 am
Pratap_shiv_sena_UpdateNews360
Quick Share

175 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் தானேவின் ஓவலா-மஜிவாடா தொகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ பிரதாப் சர்நாயக்கின் நெருங்கிய உதவியாளர் அமித் சந்தோலை அமலாக்க இயக்குநரகம் நேற்று மாலை கைது செய்தது.

இந்த வழக்கில் சந்தோலின் கைது முதன்மையானது. இதன் மூலம் டாப்ஸ் குரூப்பின் புரமோட்டரான பிரதாப் சர்நாயக்கிற்கும் ராகுல் நந்தாவிற்கும் இடையிலான நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை அவர் நிறுவனத்திற்கு வழங்கக்கூடும்.

டாப்ஸ் குரூப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் ஐயர், நந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டவிரோதமாக நிதி கையாடலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எஃப்.ஐ.ஆரில், நந்தா அரசு நிறுவனமான எம்.எம்.ஆர்.டி.ஏவுக்கு பாதுகாப்புக் காவலர்களை குறைந்த எண்ணிக்கையில் அனுப்பி, போலியாக கனக்குக் காட்டி அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் ரமேஷ் ஐயர் குற்றம் சாட்டியுள்ளார்.

புகாரின்படி, சந்தோல் எம்.எம்.ஆர்.டி.ஏ அதிகாரிகளை பணம் செலுத்துவதற்காக கையாளுவார். சர்நாயக்கின் பெயர் எஃப்.ஐ.ஆரில் இல்லை. ஆனால் 2014-15’ஆம் ஆண்டில் எம்.எம்.ஆர்.டி.ஏ ஒப்பந்தத்தைப் பெற டாப்ஸ் க்ரூப்பிற்கு சர்நாயக் உதவியதாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.

முன்னதாக செவ்வாயன்று சர்நாயக்கின் வளாகத்தில் நடந்த சோதனையின்போது வெளிநாட்டு வங்கியிடமிருந்து பெற்ற டெபிட் கார்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. ஃப்ரீமாண்ட் வங்கி சர்நாயக்கிற்கு வழங்கிய அட்டை கலிபோர்னியாவைச் சேர்ந்த ஃபர்ஹாத் தாத்ராஸின் முகவரியில் உள்ளது.

ஹவாலா பரிவர்த்தனைகள் மற்றும் சர்நாயக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் ஆஃப்-ஷோர் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் புத்தக ஆவணங்களையும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் சரநாயக்கின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர் மூலம் சர்நாயக் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெறமுடியும் எனக் கூறப்படுவதால், அமலாக்கத்துறை அவரை அதிரடியாக கைது செய்து கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இதன் மூலம் இனி வரும் நாட்களில் சரநாயக்கின்  நடவடிக்கை பாயலாம் என அமலாக்கத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Views: - 0

0

0