காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..! அமலாக்க இயக்குநரகம் அதிரடி..!
17 September 2020, 2:09 pmகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவின் மனைவி பில்கிஸ் ஷாவை 2005’ல் ஷபீர் ஷா மற்றும் ஹவாலா வியாபாரி முகமது அஸ்லம் வாணி ஆகியோருக்கு ஆதரவாக பண மோசடி செய்து தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து ஹவாலா பணத்தை சேகரித்து ஸ்ரீநகரில் தன்னிடம் வழங்குவதற்காக கமிஷன் அடிப்படையில் வேலை செய்யுமாறு அஸ்லாம் வாணி பில்கிஸ் ஷாவிடம் கேட்டுக் கொண்டார் என்று அது குற்றம் சாட்டியது.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 2005’இல் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு முன்பு அஸ்லாம் வாணியைக் கைது செய்தது. ஷாவுக்கு ரூ 2.25 கோடியை வழங்கியதாக வாணி அப்போது கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து 2007’ஆம் ஆண்டில் இருவருக்கும் எதிராக பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு கிரிமினல் வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அதன் துணை குற்றப்பத்திரிகையில் அமலாக்க இயக்குநரகம் அவரை ஒரு குற்றவாளியாக பெயரிட்டது.
கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா இந்த விஷயத்தை நவம்பர் 10’ஆம் தேதி விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்க இயக்குநரகத்தின் சிறப்பு அரசு வக்கீல்கள் என் கே மட்டா மற்றும் ராஜீவ் அவஸ்தி ஆகியோர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பில்கிஸுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பண மோசடி தடுப்பு சட்டத்தின் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஷபீர் ஷா மற்றும் அஸ்லம் வாணி மீது அமலாக்க இயக்குநரகம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.