ரியா சக்ரவர்த்தியின் சகோதரரை 18 மணி நேரம் வறுத்தெடுத்த அமலாக்க இயக்குநரகம்..! பண மோசடி வழக்கில் விசாரணை..!

9 August 2020, 3:41 pm
showik_chakraborty_Rhea_brother_UpdateNews360
Quick Share

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தியை சுமார் 18 மணி நேரம் அமலாக்க இயக்குநரகம் விசாரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று நண்பகல் தொடங்கி இரவு முழுவதும் நடந்த விசாரணையின் பின்னர் காலை 6:30 மணியளவில் பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் அலுவலகத்திலிருந்து ஷோயிக் வெளியேறினார்.

ஷோயிக்கின் அறிக்கை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது தனிப்பட்ட தொழில்கள், வருமானம், முதலீடுகள் மற்றும் அவரது சகோதரி மற்றும் ராஜ்புத் உடனான நிதி பரிவர்த்தனைகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக ஆகஸ்ட் 7’ஆம் தேதி சில மணிநேரங்கள் அவரை அமலாக்க இயக்குநரகம் விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது. அதே நாளில், இந்த வழக்கில் அவரது சகோதரி மற்றும் பிரதான குற்றவாளியான ரியா முதல் முறையாக சுமார் எட்டு மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

இதையடுத்து ரியா மற்றும் அவரது தந்தை இந்திரஜித் சக்ரவர்த்தி திங்களன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரியாவின் பட்டய கணக்காளர் (சிஏ) ரித்தேஷ் ஷா மற்றும் ராஜ்புத் நிறுவனத்தில் பணிபுரிந்த வணிக மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோரை வெள்ளிக்கிழமை அமலாக்க இயக்குநரகம் விசாரித்தது.

ராஜ்புத் உடன் நேரடி உறவில் இருந்ததாக நீதிமன்றத்தில் அவர் அளித்த மனுவில், மறைந்த நடிகருடனான நட்பு, வணிக நடவடிக்கைகள் மற்றும் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த முன்னேற்றங்கள் குறித்து ரியாவை விசாரித்ததாக கூறப்படுகிறது.

ரியாவின் வருமானம், முதலீடுகள், வணிக மற்றும் தொழில்முறை ஒப்பந்தங்கள் மற்றும் இணைப்புகளைச் சுற்றி அமலாக்கத்துறையின் கேள்விகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 4

0

0