புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த 60 அம்ச செயல் திட்டம்..! கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அதிரடி..!

Author: Sekar
3 October 2020, 5:49 pm
Ramesh_Pokhriyal_Nishank_Updatenews360
Quick Share

மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையில், கல்வி அமைச்சகம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, 2020’இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, நாட்டில் பள்ளி கல்வியை மாற்றுவதற்கான 60 அம்ச செயல் திட்டத்தை வகுத்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையை 2022-23 கல்வி அமர்வுக்குள் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காக அமைச்சகத்தால் 60 அம்சங்கள் கொண்ட செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கைக்கான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் மறுஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்கவும், விருப்பமான தரமான தேர்வை வடிவமைக்க ஒரு குழுவை அமைக்கவும் கல்வி அமைச்சகம் தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி.ஏ) அறிவுறுத்தியுள்ளது. இதை விருப்பத்தின் பேரில் உயர்கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், 2022-23’க்குள் அனைத்து மட்டங்களிலும் தேர்வுகளின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), தேசிய திறந்த பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்) மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) ஆகியவற்றிடம் பணிகளை கல்வி அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ், சிபிஎஸ்இ மற்றும் என்ஐஓஎஸ் இரண்டும் இரண்டு வகையான தேர்வுகளை நடத்தும் முறைக்கு மாறும். இந்த இரண்டு தேர்வுகளில் ஒன்று கொள்குறி வகையிலும் மற்றொன்று விரிவுரை வகையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளி கல்விக்குத் தயாராவதற்கு மூன்று மாத கால விளையாட்டு அடிப்படையிலான பள்ளி தயாரிப்பு தொகுதியை உருவாக்க அமைச்சகம் என்சிஇஆர்டி’க்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கற்றல் குறைபாடுகளைக் களைவதற்காக, அனைத்து வகுப்புகளுக்கும் கற்றல் விளைவுகளை நிர்ணயிக்கும் பணியில் என்.சி.இ.ஆர்.டி. ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

விரிவான 60 அம்ச செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இது போன்ற இன்னும் பல முடிவுகளை அமைச்சகம் எடுத்துள்ளது. மேலும் இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.

Views: - 45

0

0