முட்டை தோசை வாங்க காசு தராத பெற்றோர்… ஏரியில் குதித்து என்ஜினியரிங் மாணவன் தற்கொலை

Author: Babu Lakshmanan
22 September 2021, 8:01 pm
Quick Share

ஆந்திரா : முட்டை தோசை வாங்கி சாப்பிட பெற்றோர் பணம் கொடுக்காத காரணத்தால் என்ஜினியரிங் மாணவன் ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலாரிவாரி பள்ளியை சேர்ந்தவர் மாணவன் சாய் கிரண். அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சாய்கிரன் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சாய் கிரண் இன்று காலை பெற்றோரிடம் முட்டை தோசை வாங்கி சாப்பிட பணம் கேட்டுள்ளார்.

ஏதோ காரணத்தால் பெற்றோர் அவருக்கு முட்டை தோசை வாங்கி சாப்பிட பணம் கொடுக்கவில்லை. இதனால் வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு சென்ற சாய்கிரன் அருகில் உள்ள ஏரியில் சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மகனை காணாமல் தேடிய பெற்றோர் இறுதியாக அவர் தற்கொலை செய்து கொண்டதை தெரிந்து கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். சாதாரண முட்டை தோசைக்காக உயிரை மாய்த்துக் கொண்ட மகனின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுத காட்சி பரிதாபமாக உள்ளது.

Views: - 219

0

0