முதியவரின் 37வது திருமணம் : 28 மனைவிகள், 135 பிள்ளைகள் முன்னிலையில் கோலாகல கொண்டாட்டம்!!

10 June 2021, 6:53 pm
Rupin Sharma - Updatenews360
Quick Share

முதியவர் ஒருவர் தனது 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணத்தை செய்து கொண்டார்.

ஐபிஎஸ் அதிகரி ரூபின் ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட அந்த வீடியோவில் ஒரு முதியவர் திருமணம் செய்தது போல காட்சிகள் இருந்தது.

பின்னர் அதனடிப்படையில் அந்த முதியவருக்கு அது 37வது திருமணம். 28 மனைவிகள் உயிருடன் உள்ள நிலையில் அவர்கள் முன்னிலையில் முதியவருக்கு 37வது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் முதியவரின் 135 பிள்ளைகள், 126 பேரக்குழந்தைகள் பங்கேற்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ஐபிஎஸ் அதிகாரி ரூபின் ஷர்மா முதியவரை துணிச்சலான மனிதர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த வீடியோவில் பதிவாகியுள்ள திருமணம் எப்போது நடந்தது, எங்கே நடந்தது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.

Views: - 392

0

0