காலியாக உள்ள மூன்று இடங்களில் ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல் : ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2021, 12:35 pm
Election Commission - Updatenews360
Quick Share

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு இடத்தில் செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேர்தல் மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய இடங்களில் ராஜ்யசபா தேர்தலை உடனடியாக தனித்தனியாக நடத்த வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வில்சன், ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தி இருந்தனர்.

இதன் அடிப்படையில், தற்போது தமிழகத்தில் காலியாக இருக்கும் மூன்று இடங்களில் ஒரு இடத்தில் மட்டும் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலினை செப்டம்பர் 1ம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 3ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று இடங்கள் கலியாகவுள்ள நிலையில், தற்போது ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 296

0

0