தேர்தலில் வாக்கு செலுத்த புதிய விதி : நெறிமுறைகளை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்!!

21 August 2020, 5:14 pm
EC- Updatenews360
Quick Share

கொரோனா காலத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உலக நாடுகளே ஸ்தம்பித்துள்ளது. கொரோனாவில் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் அன்றாட பணிகள் தடைப்பட்டது. இந்த நிலையில் மெல்ல மெல்ல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தலில் எப்படி வாக்களிப்பது எந்த மாதிரியான கட்டுப்பாடுகளை விதிப்பது என வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்தல், இடைத்தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்

வாக்காளர்கள் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்

சமூக இடைவெளியை கடைபிடிக்க பெரிய அளவிலான அறைகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்
கையுறை அணிந்து கொண்டு வாக்குகளை செலுத்த வேண்டும்

வேட்பு மனுக்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு

அரசு முகாம்கள் மற்றும் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

கைகழுவுவதற்கான சானிடைசர், சோப்பு ஆகிய பொருட்கள் வைத்திருக்க வேண்டும்.

இவிஎம் கருவிகளை பயன்படுத்தும் அதிகாரிகள் கையுறை அணிய வேண்டும்.

தேர்தல் பிரச்சராங்களின் போது தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும். 

தேர்தல்  தொடர்பான பணிகளில் ஈடுபடும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். 

வாகன அணிவகுப்பில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லக் கூடாது

வாக்கு எண்ணிக்கை அறையில் அதிகபட்சமாக 7 மேஜைகள் மட்டுமே போட வேண்டும்.

ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேர் மட்டுமே வாக்களிக்க வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Views: - 3

0

0