ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது நடுவே சிக்கிய யானை : அதிர்ச்சி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 5:16 pm
Uttarakhand Elephant -Updatenews360
Quick Share

உத்தரகாண்ட் : கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் யானை ஒன்று ஆற்றின் நடுவே சிக்கி தவித்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்டுசவுர் மற்றும லால்கவுனுக்கும் இடையே உள்ள கவுலா நதியில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் ஆற்றின் நடுவே யானை ஒன்று சிக்கிகொண்டது. இது குறித்து தகவல் கிடைத்த வனத்துறையினர் உடனே யானை துரத்தி விட முடிவு செய்தனர். சீறிப்பாயும் ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் வனத்துறையினர் உடனே அங்கு சென்று தேவ்ராம்பூர் வனப்பகுதியில் விரட்டியுள்ளனர். மேலம் யானை தற்போது வனப்பகுதிக்குள் சென்று விட்டதாக வனத்துறை அதிகாரி சந்தீப் குமார் தெரிவித்துள்ளார்.

Views: - 207

0

0