எல்லை மீறிய டெல்லி விவசாயிகள் போராட்டம்: மத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை..!!

26 January 2021, 5:14 pm
senkottai - updatendews360
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் இதுவரை அமைதியாக நடந்து வந்த போராட்டம் இன்று வன்முறையாக மாறியதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 62 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், இன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கியிருந்தாலும், பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை விதித்தனர்.

ஆனால், இன்றைய பேரணியானது போலீசார் அனுமதி வழங்கிய பகுதிளை தாண்டி மற்ற பகுதிகளுக்கும் சென்றது. டெல்லி செங்கோட்டையிலும் விவசாயிகள் நுழைந்தனர். இதனையடுத்து அவர்களை கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார் தடியடி நடத்தினர். விவசாயிகளும் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். இந்த மோதலில் சில போலீசார் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அமித்ஷா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள், டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0