வரும் 26 ஆம் தேதியுடன் கர்நாடக முதலமைச்சர் பதவிக்கு END CARD? எடியூரப்பா பேட்டியால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2021, 6:22 pm
Edyurappa -Updatenews360
Quick Share

பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக உள்ள எடியூரப்பா பதவி விலக வாய்ப்புள்ளதாக அவர் அளித்துள்ள பேட்டி மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சராக உள்ள எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி வருவதால் அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ராஜினாமா செய்ய போவதில்லை என அறிவித்திருந்தார்.

ஆனால் அவர் பதவி விலக கோரி தொடர்ந்து கர்நாடகா பாஜக நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக தாம் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 26ஆம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் நட்டா பங்கு பெற உள்ளார். அதில் நட்டா என்ன முடிவு எடுக்கிறாரோ, அந்த முடிவுக்கு ஏற்ப செயல்பட உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

Views: - 199

0

0