அத்யாவசிய பொருட்கள்..! கடைகள் 24 மணிநேரமும் திறக்க அனுமதி..! ஆளுநர் உத்தரவு

26 March 2020, 7:33 pm
delhi shops open 02 updatenews360
Quick Share

டெல்லி: தலைநகர் டெல்லியில் அத்யாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், 24 மணிநேரமும் திறந்திருக்கலாம் என்று துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் அனுமதி அளித்துள்ளார்.

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பைஜால் பேசியதாவது:

அத்யாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைளை 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதி தரப்படுகிறது. அதன் மூலம், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும் என்றார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், வீடுகளுக்கு சென்று உணவு பொருட்கள் விநியோகிக்கும் சேவைக்கு தடையில்லை. கொரோனா நோயாளிகளுடன் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார். 

Leave a Reply