விஜய் நினைத்தது எல்லாமே நிறைவேறணும் : திருப்பதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2024, 1:58 pm

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நினைத்தது எல்லாம் கைகூட திருப்பதி மலையில் இருந்து ராகவா லாரன்ஸ் வாழ்த்து.

நடிகர் ராகவா லாரன்ஸ் அவருடைய குடும்பத்தினர் ஆகியோர் இன்று திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிப்பட்டனர்.

சாமி கும்பிட்ட பின் அவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர் என்னுடைய சகோதரர் புல்லட் என்ற புதிய திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அந்த திரைப்படம் வெற்றியடைய ஆசி கோரி அவரையும் அழைத்து கொண்டு திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் ஆசியை பெற்று இருக்கிறோம்.

மாற்றம் என்ற பெயரில் நான் செய்துவரும் சமூக சேவைகள் சிறப்பான முறையில் பொதுமக்களை சென்றடைகின்றன.

நடிகர் விஜயின் அரசியல் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் நினைத்தது எல்லாம் நிறைவேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று அப்போது ராகவா லாரன்ஸ் கூறினார்.

  • manikandan rajesh sobhithaseparation சினிமா பிரபலங்களுக்கு என்ன ஆச்சு…விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை…!
  • Views: - 357

    0

    0