பாஜகவில் இணையும் திக் விஜய சிங்கின் மகள்..! பீகார் தேர்தலுக்கு வலு சேர்க்கும் பாஜக..!

Author: Sekar
4 October 2020, 4:27 pm
Shreyashi_Singh_Joins_BJP_UpdateNews360
Quick Share

பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த திக்விஜய சிங்கின் மகளும் துப்பாக்கிச் சுடும் வீராங்கனையான ஸ்ரேயாசி சிங் இன்று பாரதிய ஜனதா கட்சியில் சேரவுள்ளார். அவரது தாயார் புத்துல் சிங்கும் எம்பியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

29 வயதான துப்பாக்கி சுடும் வீரர் ஸ்ரேயாசி சிங், அர்ஜுனா விருது பெற்றவர், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் .

பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங், பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் முன்னிலையில் சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை ஸ்ரேயாசி சிங் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர், அவர் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் (ஆர்.ஜே.டி) சேரக்கூடும் என்று ஊகிக்கப்பட்டது. இதற்காக தேஜஷ்வி யாதவ் அவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரேயாசி அமர்பூர் அல்லது பாங்காவில் உள்ள ஜமுய் சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது. முன்னதாக முன்னாள் பாங்கா பாராளுமன்ற உறுப்பினர் திக்விஜய சிங் இறந்த பின்னர் 2010 மக்களவைத் இடைத்தேர்தலில் பாங்காவிலிருந்து சுயேட்சை வேட்பாளராக அவரது தாய் புத்துல் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது ஸ்ரேயாசி தனது தாய்க்கான மக்கள் தொடர்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் 243 இடங்களுக்கான எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 10’ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதற்கிடையே 121 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு பாஜக ஒப்புக் கொண்டுள்ளதாகவும், கூட்டணி கூட்டணிக்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மாநில சட்டசபையில் மொத்தம் 243 இடங்களில் 122 இடங்களில் போட்டியிடும் என்றும் யூகங்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில், வரவிருக்கும் தேர்தல்களுக்கு பஸ்வான் கட்சி அதிக எண்ணிக்கையிலான இடங்களை இலக்காகக் கொண்டிருப்பதால் எல்.ஜே.பியின் தொகுதிப் பங்கீடு குறித்த நிச்சயமற்ற தன்மை தொடர்கிறது.

Views: - 43

0

0