சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை அக்.31 வரை நீட்டிப்பு: சரக்கு விமானத்திற்கு NO தடை..!!

Author: Aarthi Sivakumar
29 September 2021, 10:21 am
Quick Share

புதுடெல்லி :கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

latest tamil news

சர்வதேச விமான சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை நாளை முடிவடைய இருந்தநிலையில், அக்டோபர் 31ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய ஒப்புதல்களுடன், சில குறிப்பிட்ட மார்க்கங்களில் மட்டும் விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 585

0

0