ரயில்வே முன்பதிவு பயணச்சீட்டு ரத்து: கட்டணத்தை திரும்ப பெற கால அவகாசம் நீட்டிப்பு..!!

By: S
8 January 2021, 11:33 am
railway -updatenews360
Quick Share

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறும் அவகாசத்தை ஒன்பது மாதங்களாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 21 முதல் ஜூன் 31 வரை நாடு முழுதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தில் ரயில்களில் பயணிக்க நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அதை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டது.

பயணச்சீட்டு 139 என்ற எண் மூலமோ அல்லது ஐஆர்சிடியு இணையதளம் மூலமோ ரத்து செய்யப்பட்டால், குறிப்பிட்ட பயண காலத்துக்கான டிக்கெட்டுகளை, முன்பதிவு மையங்களில் ஒப்படைப்பதற்கான காலவரம்பும், பயண தேதியில் இருந்து 9 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயண தேதியில் இருந்து, 6 மாதங்கள் முடிந்த பிறகு, பல பயணிகள், பயணச்சீட்டுகளை ரயில்வே மண்டல அலுவலகத்திலோ அல்லது டிடிஆர் மூலமாகவோ அல்லது பொது பயண விண்ணப்பம் மூலமாகவோ தாக்கல் செய்திருக்கலாம். இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்பதிவு டிக்கெட் தொகையை திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Views: - 51

0

0