மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் மரணம்..!

20 September 2020, 9:56 am
EAM_Jaishankar_Mother_UpdateNews360
Quick Share

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் சுலோச்சனா சுப்பிரமணியம் நேற்று காலமானார். ஜெய்சங்கர் தனது தாயின் மறைவு குறித்து வெளியிட்ட ஒரு ட்வீட்டில், அவரது படத்துடன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“எனது தாயார் சுலோச்சனா சுப்பிரமணியம் இன்று காலமானதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவரை அவர்களின் எண்ணங்களில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

மேலும் 80 வயதைக் கடந்த தனது தாயின் படத்தையும் ஜெய்சங்கர் பகிர்ந்துள்ளார்.

ஜெய்சங்கர், விஜய் குமார் மற்றும் சஞ்சய் சுப்பிரமணியம் என இவருக்கு மொத்தம் மூன்று மகன்கள் உள்ளனர்.

சுலோச்சனா சுப்பிரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தவர்களில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாஜக தலைவர் ராம் மாதவ், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் அடங்குவர்.

தனது மகன் ஜெய்சங்கரைப் போலவே அவரது கணவர் சுப்பிரமணியமும், ஒரு குறிப்பிடத்தக்க மூலோபாய விவகார நிபுணர் மற்றும் இந்தியாவின் அணுசக்தி கோட்பாட்டின் தந்தை என்று அறியப்பட்டவர். அவர் பிப்ரவரி 2011’இல் இறந்தார்.