மாமியார் வீட்டாரை ஏமாற்ற போலி ராணுவ வீரர் நாடகம் : குடியரசு தினத்தில் குடி முழுகிப் போன கொடுமை!!

28 January 2021, 12:37 pm
Fake Army Soldier- Updatenews360
Quick Share

மத்திய பிரதேசம் : ராணுவ வீரர் உடையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள அம்பேத்கர் நகரில் ராணுவ அதிகாரிகள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் குடியரசுத் தினத்தன்று இளைஞர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார்.

மேலும் அந்த நபர் அணிந்திருந்த ராணுவ உடை சரியாக அணியாமல் சுற்றித் திரிந்தார். ஆடை சரியாக போடத் தெரியாத ஒரு ராணுவ வீரரா என சந்தேகம் கொண்ட உயர் ராணுவ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால் விசாரணையில் சரியாக பதில் கூறாமல் முன்னுக்கு பின் முரணாக பேசினார். தான் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் என்றும் தனது பெயர் மிமுன் வர்மா என கூறினார். இதையடுத்து பீகார் மாநில ராணுவ பிரிவில் விசாரித்த போது அப்படி ஒருவர் பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து மிதுன் வர்மாவை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மிதுன் வர்மா ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா நகரை சேர்ந்தவர் என்றும், பிதாம்பூர் நகரில் பாதுகாவலராக வேலை பார்த்ததும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், தனக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ளதால், மாமியார் வீட்டில் ராணுவத்தில் பணியாற்றி வருவதாக பொய் கூறி, தன்னை ஒரு ராணுவ வீரராக காட்டிக்கொள்ள குடியிருப்புக்குள் சுற்றி திரிந்ததாக கூறினார்.

இதையடுத்து போலி ராணுவ வீரரை காவலில் எடுத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரை ஏமாற்ற நினைத்து போலி ராணுவ வீரர் மாமியார் வீட்டுக்கு சென்ற சம்பவம் ஷாக் ஆக வைத்துள்ளது.

Views: - 0

0

0