சிகிச்சை எடுப்பதாக கூறி சிறுமியை 3 மாதம் சீரழித்த போலி மந்திரவாதி : பெண்கள் கொடுத்த தர்ம அடி!!

Author: Udayachandran
13 October 2020, 5:38 pm
Fake sorcerer - Updatenews360
Quick Share

தெலுங்கானா : தீராத வியாதிகளை மந்திர சக்தி மூலம் தீர்க்கிறேன் என்று கூறி 15 வயது சிறுமியை மூன்று மாத காலம் பாலியல் ரீதியாக பயன்படுத்திய உள்ளூர் பத்திரிகை ஆசிரியரை மக்கள் அடித்து துவைத்தெடுத்தனர்.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள பூசல காலனியில் உள்ளூர் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரான பிரசாத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் பூஜைகள் நடத்தி தீராத வியாதிகளையும் தீர்த்து வைக்கும் மந்திர சக்தி எனக்கு உள்ளது என்று அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.

அவர் சொல்வது உண்மை என்று நம்பி பலர் பிரசாத்தை வீடுகளுக்கு வரவழைத்து பரிகார பூஜை செய்து கொண்டனர். இந்தநிலையில் அடிலாபாத்தை சேர்ந்த பெற்றோர் தங்களுடைய 15 வயது மகளுக்கு பல ஆண்டுகளாக உடலில் குறைபாடுகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்று போலி மந்திரவாதி பிரசாத்திடம் கேட்டு கொண்டனர்.

மூன்று மாத காலம் மந்திரத்துடன் கூடிய சிகிச்சை எடுத்து கொண்டால் சிறுமிக்கு ஏற்பட்ட உடல் கோளாறுகள் நீங்கும் என்று பிரசாத் சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். போலி மந்திரவாதி பிரசாத் கூறுவதை உண்மை என்று நம்பிய சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளை கடந்த மூன்று மாதங்களாக தினமும் பிரசாத்திடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

சிகிச்சை அளிக்கிறேன் என்ற பெயரில் தனி அறையில் தினமும் அந்த சிறுமிக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து பிரசாத் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.இதனால் சிறுமி கர்ப்பம் ஆன நிலையில், அவரை இன்று மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிறுமியை பரிசீலித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

பாலியல் அத்துமீறலின் போது யாரிடமாவது கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று பிரசாத் அந்த சிறுமியை மிரட்டி உள்ளான். எனவே சிறுமி இதுபற்றி யாரிடமும் கூறாமல் இருந்து வந்தார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் நடந்த சம்பவங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

அப்போது பிரசாத் சிறுமியிடம் கடந்த 3 மாதமாக தூக்க மாத்திரைகளை கொடுத்து பாலியல் அத்துமீறல் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் பிரசாத்தை துடைப்பம், செருப்பு, கட்டைகள் ஆகியவற்றால் புரட்டி எடுத்தனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

மந்திர சக்தி மாந்தரீகம் என்று கூறும் போலி சாமியார்களை நம்பி சென்றால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்ற அபாயத்தை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

Views: - 54

0

0