மரத்தில் தொங்கவிட்டு இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய குடும்பத்தினர் : பதற வைக்கும் வீடியோ!!

4 July 2021, 10:43 am
Faliyi Attack Daughter - Updatenews360
Quick Share

மத்தியபிரதேசம் : 19 வயது இளம்பெண்ணை ஊருக்கு நடுவே மரத்தின் அந்தரத்தில் தொங்கவிட்டு தந்தை மற்றும் சகோதரன் அடித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமத்தில் 19 வயது இளம்பெண்ணுக்கு மூன்று மாதத்திற்கு முன் திருமணம் செய்து வைத்தனர்.

புகுந்த வீட்டில் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அங்கிருந்து வெளியேறிய அந்த பெண், பிறந்த வீட்டிற்கு சென்றால் அடிப்பார்கள் என கருதி உறவினர் விட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இதையறிந்த பிறந்த வீட்டில் இருந்து வந்த தந்தை மற்றும் சகோதரன் பெண்ணை தரதர வென இழுத்து வந்து ஊருக்கு நடுவே உள்ள மரத்தில் தொங்கவிட்டு கட்டையால் சரமாரியாக அடித்துள்ளனர்.

இதை சுற்றி வேடிக்கை பார்த்த சிலர் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்துள்ளனர். அந்த காட்சிகள் வைரலாகி வெளியாக, சம்மந்தபட்டவர்களை கைது செய்ய கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து அம்மாட்ட போலீசார் உடனே பெண்ணின் தந்தை மற்றும சகோதரனை கைது செய்துள்ளனர். 19 வயது பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து, வாழாமல் வந்ததால் இப்படி ஒரு தண்டனை கொடுப்பது சட்டப்படி குற்றம் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Views: - 160

0

0