கேரளாவில் முதன்முறையாக தனிக்கட்சி ஆரம்பிக்கும் பிரபல நடிகர்….யார் தெரியுமா?..

31 October 2020, 3:22 pm
devan - updatenews360
Quick Share

கேரளாவில் விரைவில் புதிய கட்சி ஒன்றை துவங்க உள்ளதாக பிரபல நடிகர் தேவன் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் நடித்த ஆனஸ்ட் ராஜ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, தனது நடிப்பால் பிரபலமானவர் மலையாள நடிகர் தேவன். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு வில்லனாக பாட்ஷா படத்தில், ரசிகர்களிடையே நெருக்கமானார்.

இந்நிலையில், விரைவில் புதிய கட்சி ஒன்றினை துவங்கி, வரும் கேரளா சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக தேவன் கூறியுள்ளார். அதேசமயம், தான் ஆரம்பிக்க போகும் கட்சியில் சினிமாக்காரர்களுக்கோ, தற்போது அரசியல் கட்சி இருப்பவர்களுக்கோ இடம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் திறமை வாய்ந்த புதிய நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்றும், ஏற்கனவே அரசியலில் இருக்கும் நபர்களை வைத்து, அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டுவர முடியாது என்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே, கேரள அரசியலில் ஒருசில மலையாள நடிகர்கள் சில கட்சிகளில் இணைந்து எம்எல்ஏ, எம்.பி.ஆக பொறுப்பு வகித்து வரும் நிலையில், தனியாக ஒரு நடிகர் கட்சி ஆரம்பிப்பது கேரளாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0