தனது ரசிகருக்கு வீடியோ கால் செய்து வியப்பில் ஆழ்த்திய பிரபல நடிகர் : கண்கலங்கி உருக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2021, 3:37 pm
Junior NTR -Updatenews360
Quick Share

ஆந்திரா : விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் ரசிகரை வியப்பில் ஆழ்த்திய ஜூனியர் என்டிஆரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சினிமாவில் தோன்றும் நட்சத்திரங்கள் எளிதில் ரசிகர்களை உருவாக்க முடியாது. அப்படி ரசிகர்களை உருவாக்கிவிட்டு அவர்களை கண்டும் காணாமல் உள்ளவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

ஆனால் தனது ரசிகரை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபல நடிகரின் செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மூலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முரளி.

முரளி ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர் ஆவார். சில நாட்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கிய முரளியின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்தது.

தற்போது அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.
இந்த நிலையில் முரளி ஜூனியர் என்டிஆரை பார்க்க வேண்டும் என்ற தன்னுடைய ஆவலை குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

முரளியின் விருப்பம் பற்றி குடும்ப உறுப்பினர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் ஜூனியர் என்டிஆருக்கு தகவல் அளித்தனர். இந்த நிலையில் இன்று வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முரளியுடன் ஜூனியர் என்டிஆர் பேசினார்.

எதை பற்றியும் கவலைப்படாதீங்க, நீங்க குமணமாகிடுவீங்க என தனது ரசிகரிடம் வீடியோ காலில் தன்னம்பிக்கை அளித்த ஜூனியர் என்டிஆர், ரசிகரின் நிலையை பார்த்து கண்கலங்கினார்.

படத்தில் நடித்தோம் முடித்தோம் என மற்ற நடிகர்களை போல இல்லாமல், தனது ரசிகரை நினைத்து அவருக்கு ஊக்கம் அளித்த ஜுனியர் என்டிஆரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மருத்துவமனையில் தன்னுடன் வீடியோ காலில் ஜூனியர் என்டிஆர் பேசியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று முரளி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 420

0

0