திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரபல நடிகை : கோவில் வளாகத்தில் முத்தம் கொடுத்த காதல் கணவரால் சர்ச்சை!!

By: Udayachandran
14 September 2021, 1:59 pm
Shriya saran 1 - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல நடிகை ஸ்ரேயா தனது காதல் கணவருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல நடிகை ஸ்ரேயா தனது காதல் கணவருடன் இன்று காலை விஐபி தரிசன மூலமாக சுவாமி தரிசனம் செய்து கொண்டார். சுவாமி தரிசனத்திற்குப் பின் ரங்கா நாயக்கர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

கோவிலுக்கு வெளியே வந்த அவர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. தற்போது தனது கணவருடன் சுவாமி தரிசனம் செய்துகொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் கோவில் வளாகத்திற்கு வந்த ஸ்ரேயாவை காதல் கணவர் முத்தமிட்டார். இதுகுறித்த போட்டோ, வீடியோ இணையத்தல் வைரலானது. இந்த நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் உள்ள இந்துக்களால் புனிதமாக போற்றப்படும் திருப்பதி கோவில் வளாகத்தில் கணவன் மனைவி முத்தமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 316

0

0