பிரபல பின்னணி பாடகரை ஆளும் கட்சி எம்எல்ஏவின் மகன் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவராக இருப்பவர் சோனு நிகம். இவர் தமிழில் ஏ.ஆர்.ரகுமான், ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல்வேறு சூப்பர்ஹிட் பாடல்களை பாடி உள்ளார். குறிப்பாக ஜீன்ஸ் படத்தில் இடம்பெறும் வாராயோ தோழி, மதராசபட்டினம் படத்தில் வரும், ஆருயிரே, கிரீடம் படத்தில் இடம்பெறும் விழியில் உன் விழியில் போன்ற பாடல்களையும் சோனு நிகம் தான் பாடி இருந்தார்.
தனித்துவமான குரல்வளம் கொண்ட சோனு நிகமுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பிரபல பாடகராக வலம் வரும் இவர், அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் சோனு நிகம் கலந்து கொண்டு, சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தினார். இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு அவரது சூப்பர்ஹிட் பாடல்களை கேட்டு மகிழ்ந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. பிரகாஷ் பதர்பேகர் என்பவரின் மகனும் கலந்துகொண்டுள்ளார். இவர் சோனு நிகமுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது, அவரது பாதுகாவலர்கள் எம்எல்ஏ மகனை தடுத்து நிறுத்தினர். இதனால், கடுப்பான அந்த நபர், சோனு நிகம் மேடையில் இருந்து கீழே இறங்கும் போது, அவரது பாதுகாவலரை கீழே தள்ளிவிட்டதோடு, சோனு நிகமையும் தள்ளிவிட முயன்றுள்ளார். இதில் சோனு நிகம் எந்தவிதமான காயம் இன்றி தப்பித்தாலும், அவரது பாதுகாவலருக்கு பலத்த அடி ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.