ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கான போனஸ் மற்றும் பணப்பலன்களை குறைக்க முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
பொதுவாக, பிற துறைகளை காட்டிலும் ஐ.டி. நிறுவனங்களில் வருமான உயர்ந்ததாகவே இருக்கும். வெளிநாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனங்களில், பணப்பலன்கள் அந்தந்த நாடுகளைப் பொறுத்து மாறுபடும். எனவே, ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிவதை இளைஞர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கானோர் ஐ.டி. துறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் ஐ.டி. நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கான போனஸை குறைக்க திட்டமிடுகின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் பொருளாதார மந்தநிலையை எதிர்நோக்கி உள்ளதால், அவற்றை சார்ந்துள்ள இந்திய நிறுவனங்களும் ஊழியர்களுக்கான சலுகைகளை குறைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ்
லிமிடெட், விப்ரோ நிறுவனங்களும் இது தொடர்பான அறிவிப்பை தங்களின் ஊழியர்களிடம் தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும், இனி கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் வேலைக்கு ஆட்களை எடுக்கும் முடிவையும் இந்த நிறுவனங்கள் கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…
பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை…
ஆப்ரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதல் இந்தியர்களாகிய நம் அனைவரையும் உலுக்கிய சம்பவம் என்பதை நாம் மறந்திருக்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலால்…
ஜம்மு காஷ்மீர் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே…
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
This website uses cookies.