பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரி மரணம்..! கொரோனாவால் நேர்ந்த சோகம்..!

11 August 2020, 6:01 pm
Rahat_Indori_UpdateNews360
Quick Share

பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார். முன்னதாக அவருக்கு ஞாயிற்றுக்கிழமை சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஸ்ரீ அரவிந்தோ மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், நேற்று இந்தோரிக்கு இரண்டு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். “கொரோனா உறுதி செய்யப்பட பின்னர் அவர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 60% நிமோனியா இருந்தது” என்று டாக்டர் வினோத் பண்டாரி கூறினார்.

சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த 70 வயதான இந்தோரி, தனக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்த்திலும் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

“ஆரம்ப கொரோனா அறிகுறிகளைக் காட்டிய பின்னர், கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது எனக்கு தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அரவிந்தோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்” என்று இந்தோரி அதில் குறிப்பிட்டிருந்தார்.

நன்கு அறியப்பட்ட உருது கவிஞரான அவருக்கு பலதரப்பிலும் இருந்து விரைவாக குணமடைய வேண்டி வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. மேலும் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் வழியாக தனது நிலை குறித்து அவ்வப்போது வெளியிடுவதாக இந்தோரி குறிப்பிட்டிருந்தார். அவரது நல்வாழ்வைப் பற்றி விசாரிக்க அவரது குடும்பத்தினரை யாரும் அழைக்க வேண்டாம் என்றும் அதில் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சமூக, அரசியல் சூழ்நிலைகள் குறித்து தனது கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்தீய இந்தோரியின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 5

0

0