போதும் டா சாமி…. ஆள விடுங்க : காங்கிரஸ் கட்சியால் FACEBOOK, INSTAGRAMல் இருந்து விலகிய பிரபல வில்லன் நடிகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2021, 12:53 pm
Joju George -Updatenews360
Quick Share

கேரளா : போராட்டத்தின் போது போக்குவரத்து இடையூறு செய்ததாக காங்கிரஸ் கட்சியினர் மீது புகார் கொடுத்திருந்த பிரபல நடிகர் பேஸ்புக்கில் இருந்து விலகினார்.

கேரள மாநிலம் கொச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இரு நாட்களுக்கு முன் நடந்த இந்த போராட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக காரில் வந்த நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஏன் போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறீர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரது கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும் ஜோஜூ ஜார்ஜ் குடிபோதையில் இருந்ததாகவும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் காரை சேதப்படுத்தியதாக ஜோஜு காவல் நிலையத்தில் காங்கிரஸ் மீது புகார் தொடுத்திருந்தார். இதையடுத்து கொச்சி முன்னாள் மேயரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான டோனி சாமினி உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Joju George deactivates Facebook, Insta accounts after Kochi road blockade  controversy

மேலும் ஒருவரை கைது செய்திருந்த நிலையில், ஜோஜு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கண்டனம் எழுந்தது. இதனால் அவரது பேஸ்புக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். இதையடுத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து ஜோஜு வெளியேறினார்.

மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடதக்கது.

Views: - 596

0

0