இந்தியா -ஆஸி., போட்டிக்காக டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் : கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாப பலி.. தடியடி நடத்திய போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 September 2022, 1:41 pm
Ind Aus Girl Dead - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் டி20 போட்டியை பார்க்க ஹைதராபாத்தில் உள்ள ஜிம்கான கிளப் எதிரே டிக்கெட் வாங்க ஒரே நேரத்தில் ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியனார்.

இம்மாதம் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

போட்டியை காண்பதற்காக டிக்கெட் விற்பனை செய்யப்படும் ஐதராபாத்தில் உள்ள ஜிம்கானா கிளப் அருகே இன்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

அப்போது டிக்கெட் வாங்க ரசிகர்களுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் கீழே விழுந்து கூட்ட நெரிசலில் மிதிபட்டு படுகாயம் அடைந்தனர்.

டிக்கெட் வாங்க வந்து கூட்ட நெரிசல் சிக்கிய இளம் பெண் ஒருவர் பலியாகிவிட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அங்கு குவிக்கப்பட்ட போலீசார் டிக்கெட் வாங்குவதற்காக குவிந்த ரசிகர்களை தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இந்த சம்பவம் ஹைதராபாத்தில் மட்டுமின்றி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 232

0

0