ஆடுகளை மேய்க்க சென்ற போது ஆற்றின் நடுவே சிக்கிய விவசாயி : உயிருக்கு போராடிய காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 1:05 pm
Andhra Goat Farmer In River -Updatenews360
Quick Share

ஆந்திரா : ஆடுகளை மேய்க்க சென்ற விவசாயி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த மூன்று நாட்களாக ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்தப் பகுதியில் ஓடும் சுவர்ணமுகி நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.


இந்நிலையில் இன்று காலை நதியில் வெள்ளப்பெருக்கு திடீரென்று அதிகரித்தபோது அந்த வழியாக ஆடு மேய்ப்பதற்காக 50 ஆடுகளுடன் சென்றுகொண்டிருந்த விவசாயி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.

இது பற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மழை வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் அவரை மீட்க இயலாத நிலை ஏற்பட்டது.

மீட்க சென்ற அதிகாரிகளிடம், ஆடுகளையும் மீட்டால்தான் நானும் வெளியே வருவேன் என அடம்பிடித்தார். ஆனால் ஹெலிகாப்டர் வரவழைத்த மீட்புக்குழுவினர் உதவியுடன் விவசாயி மீட்கப்பட்டார். மீட்பதற்காக அவர் ஓட்டிச்சென்ற 50 ஆடுகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளன.

Views: - 159

0

0