டெல்லிக்குள் தான் டிராக்டர் பேரணி..! விவசாய அமைப்புகள் பிடிவாதம்..! காவல்துறையினருடனான பேச்சவார்த்தை தோல்வி..!

21 January 2021, 3:16 pm
tractor_parade_updatenews360
Quick Share

டெல்லியின் பரபரப்பான வெளி வட்ட சாலையில் டிராக்டர் பேரணியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், ஜனவரி 26 டிராக்டர் பேரணி தொடர்பாக காவல்துறை மற்றும் வேளாண் சங்கங்களுக்கு இடையிலான இரண்டாவது சுற்று சந்திப்பு இன்று முடிவேதும் எட்டப்படாமல் கலந்துள்ளது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், வேளாண் தலைவர்கள் தங்கள் டிராக்டர் பேரணியை தேசிய தலைநகருக்கு வெளியே நடத்த வேண்டும் என்று காவல்துறை விரும்புகிறது என்றார்.

“நாங்கள் எங்கள் அணிவகுப்பை டெல்லிக்குள் அமைதியாக செய்வோம். டெல்லிக்கு வெளியே டிராக்டர் பேரணியை நடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அது சாத்தியமில்லை” என்று மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்கும் யோகேந்திர யாதவ் கூறினார்.

போலீஸ் அதிகாரிகள் தங்கள் டிராக்டர் பேரணியை அவுட்டர் ரிங் சாலைக்கு பதிலாக குண்ட்லி-மானேசர்-பல்வால் அதிவேக நெடுஞ்சாலையில் நடத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் விவசாயிகள் எதற்கும் ஒத்துழைக்க மறுப்பதால் பேச்சுவார்த்தை நடத்தியதே வீண் எனும் கருத்து நிலவுகிறது.

இதற்கிடையே காவல்துறையினருடனான சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு விவசாயி தலைவர், “நாங்கள் எங்கள் பேரணியை டெல்லிக்கு வெளியே நடத்த வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் நாங்கள் அதை டெல்லிக்குள் நடத்த விரும்புகிறோம். இன்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

சிங்கு எல்லைக்கு அருகிலுள்ள மந்திரம் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தை இணை போலீஸ் கமிஷனர் எஸ் எஸ் யாதவ் ஒருங்கிணைத்தார்.

இந்த கூட்டத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பு ஆணையர் சஞ்சய் சிங், சிறப்பு புலனாய்வு போலீஸ் கமிஷனர் தேபேந்திர பதக் மற்றும் டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச காவல்துறை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0