அக்டோபர் வரை போராட்டம் நீடிக்கும் என அறிவித்த விவசாய அமைப்பு..! தீர்வு காண விருப்பம் இல்லையா..?

2 February 2021, 3:27 pm
rakesh_tikait_updatenews360
Quick Share

பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் இன்றைய ஆர்ப்பாட்டத்தில், ‘வேளாண் சட்டங்கள் மீண்டும் திரும்பப்பெறாவிட்டால் திரும்புவதில்லை” எனும் முழக்கத்தை முன்வைத்துள்ளார். 

மேலும் பேசிய டிக்கைட், அக்டோபர் மாதத்திற்கு முன்பு போராட்டம் முடிவடையாது என்று தெரிவித்தார். “இந்த கிளர்ச்சி அக்டோபருக்கு முன்னர் முடிவடையாது. இது விரைவில் முடிவடையாது.” என்று டிக்கைட் கூறினார்.

டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூருக்கு சென்றுள்ள சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தை சந்தித்த உடனேயே அவரது அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராவத்தின் வருகை குறித்து பேசிய ராகேஷ் டிக்கைட், “எதிர்க்கட்சி எங்களை ஆதரிக்க வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அது அரசியல்மயமாக்கப்படக்கூடாது. தலைவர்கள் வந்தால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.” என்றார்.

“போக்குவரத்து இயக்கம் விவசாயிகளால் தடுக்கப்படவில்லை. இதற்கு போலீஸ் தடுப்பு அமைத்துள்ளது தான் காரணமாகும்.” என்று டிக்கைட் மேலும் கூறினார்.

முன்னதாக சிரோன்மணி அகாலிதளம், ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தளம், சமாஜ்வாடி கட்சி போன்ற கட்சிகளின் தலைவர்கள் காசிப்பூருக்கு சென்று விவசாயிகளை சந்தித்தனர்.

இது டெல்லியில் வன்முறை நடத்தப்படுவதை மறைமுகமாகத் தூடியதாகக் கூறப்படும் ராகேஷ் டிக்கைட்டின் பாரதிய கிசான் யூனியனின் தலைமையிலான போராட்டக்காரர்களின் முகாம் மைதானமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0