மத்திய அரசின் புகையிலை சட்டத்திருத்த மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு..? திரும்பப்பெற வலியுறுத்தல்..!

13 January 2021, 5:22 pm
gutka_jharkha_updatenews360
Quick Share

சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசால் முன்மொழியப்பட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு விவசாயிகள் அமைப்பான ஃபைஃபா இன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டது.

முன்மொழியப்பட்ட கோப்டா (சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம்) திருத்த மசோதா 2020, இந்தியாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் சட்டவிரோத சிகரெட் வணிகத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் இது சட்ட ரீதியிலான சிகரெட் விநியோகத்தை கடுமையாக பாதிக்கும்.

மேலும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் குஜராத் முழுவதும் உள்ள  வணிக பயிர்களின் விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் என்று ஃபைஃபா தெரிவித்துள்ளது.

அகில இந்திய உழவர் சங்கங்களின் கூட்டமைப்பின் (ஃபைஃபா) பொதுச் செயலாளர் முரளி பாபு, திருத்த மசோதாவில் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான உலக சுகாதார அமைப்பின் கட்டமைப்பின் (எஃப்.சி.டி.சி) அனைத்து விதிகளும் முழு பலத்துடன் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் எஃப்.சி.டி.சி விதிகளை விட கடுமையான விதிகளை விதித்து வருவதாகவும்  கூறினார்.

“இருப்பினும், இந்த முன்மொழியப்பட்ட கடுமையான சட்டங்கள் காரணமாக புகையிலை விவசாயிகள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து இன்னும் எந்த பேச்சும் அல்லது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.

இந்த முரண்பாட்டை பிரதமருக்கு முன்னிலைப்படுத்த ஃபைஃபா விரும்புகிறது. மேலும் இது, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பிற புகையிலை விவசாயிகள் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்திய எஃப்.சி.வி புகையிலை விவசாயிகளுக்கு இது ஒரு மரண தண்டனையாக இருக்கும் என்பதால் கோப்டா திருத்த மசோதாவை திரும்பப்பெறுமாறு மோடியிடம் வேண்டுகோள் விடுப்பதாக ஃபைஃபா தெரிவித்துள்ளது.

“முன்மொழியப்பட்ட கடுமையான திருத்தங்கள் சில்லறை விற்பனையாளர்களையும் வர்த்தகர்களையும் பயமுறுத்தும், மேலும் அவர்கள் சட்டரீதியாக சிகரெட்டுகள் விற்பனையில் ஈடுபட விரும்ப மாட்டார்கள்” என்று ஃபைஃபா தலைவர் ஜவரே கவுடா கூறினார். இதன் விளைவாக, சட்டவிரோத புகையிலை சிண்டிகேட்டுகளின் சட்டவிரோத சிகரெட்டுகளால் இந்திய சந்தையில் வெள்ளம் பெருகும் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டவிரோத சிகரெட்டுகள் இந்திய விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் புகையிலையைப் பயன்படுத்துவதில்லை என்பதால், இதன் விளைவாக நாட்டின் பயிர் சார்ந்து இருக்கும் மில்லியன் கணக்கான புகையிலை விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்வாதாரம் இழக்கப்படும் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீது மத்திய அரசு கடுமையான விதிகளை அமல்படுத்தி வருகிறது. இது புகையிலை சார்ந்த விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியதோடு, சட்டவிரோத சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது விதிகளை மேலும் கடுமையாக்குவது, கோடிக்கணக்கான புகையிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதகமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என விவசாயிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

Views: - 8

0

0