டெல்லி-ஹரியானா எல்லையில் கடும் பதற்றம்..! விவசாயிகள் போராட்டத்தால் போலீஸ் குவிப்பு..!

26 November 2020, 12:13 pm
Delhi_Haryana_Border_Protest_UpdateNews360
Quick Share

அம்பாலா அருகே டெல்லி-ஹரியானா எல்லையில் இன்று காலை முதல் கடும் பதற்றம் நிலவி வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் டெல்லிக்கு வருவதைத் தடுக்க ஹரியானா போலீசார் தண்ணீர் பீரங்கி, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்து வருகின்றனர்.

எதிர்ப்பாளர்கள், மறுபுறம், கற்களை வீசி எறிந்தனர். டெல்லியைச் சுற்றி பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்ட நிலையில், விவசாயிகள் குழுக்களாகப் பிரிந்து தேசிய தலைநகரை அடைய புதிய திட்டங்களை வகுத்தனர்.

நேற்று இரவு உறைபனி குளிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது நீர் பீரங்கிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பரவலான விமர்சனங்கள் எழுந்தபோதும், இன்று காலை போலீஸ் வழக்கம் போல் தடுப்பு நடவடிக்ககையில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய விவசாய சீர்திருத்த மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, போலீசார் இன்று காலை மீண்டும் டெல்லிக்கு வருவதைத் தடுக்க அம்பாலா அருகே நீர் பீரங்கிகள், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி தடுத்தனர்.

“மத்திய அரசின் இந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதாவை திரும்பப் பெறுவதற்கு பதிலாக, விவசாயிகள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பதை தடுக்க அரசு முயற்சிக்கிறது. அவர்கள் மீது நீர் பீரங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் மீது இத்தகைய அநீதி இழைக்கப்படுவது நியாயமில்லை. அமைதியான எதிர்ப்பு அவர்களின் அரசியலமைப்பு உரிமை.” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை ட்வீட் செய்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் டெல்லிக்கு வருவதைத் தடுக்க டெல்லி-ஹரியானா எல்லையில் வியாழக்கிழமை காலை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. டெல்லி சாலோ அணிவகுப்பின் ஒரு பகுதியாக பஞ்சாப் விவசாயிகள் பெருமளவில் கூடியிருந்ததால், ஹரியானா பஞ்சாபுடனான தனது எல்லையை முற்றிலுமாக மூடிவிட்டது.

நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக தேசிய தலைநகரில் எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு உழவர் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்ததாக டெல்லி காவல்துறை நேற்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0