டெல்லிக்குள்ளேயே முகாமிட்டுள்ள ஆயிரக்கனக்கான விவசாயிகள்..! தொடரும் பரபரப்பு..!

26 January 2021, 7:25 pm
Delhi_Farmers_Protest_UpdateNews360
Quick Share

விவசாயிகளின் சில குழுக்கள் இன்று மாலை வேளாண் சட்டங்களுக்கு எதிரான டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பல மணிநேர குழப்பங்களுக்குப் பிறகு தாங்கள் முன்பு தங்கியிருந்த டெல்லி எல்லைக்கு செல்லத் தொடங்கின. ஆனால் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஐ.டி.ஓ, நாங்லோய் மற்றும் முகர்பா சவுக் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

ஐ.டி.ஓ கிராசிங்கில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் அமர்ந்துள்ளனர் மற்றும் சிங்கு எல்லையின் எதிர்ப்பு இடத்திலிருந்து நகரத்திற்குள் நுழைந்த பலர் டெல்லியின் வெளி வட்டசாலையை நோக்கி நகர்ந்தனர். அவர்கள் இன்று மாலை விவசாயிகள் திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லை எதிர்ப்பு இடங்களுக்கு திரும்பிச் செல்வதைக் காண முடிந்தது.

முன்னதாக, குச்சிகள் மற்றும் இதர ஆயுதங்களைப் பயன்படுத்தி, டிராக்டர்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தடைகளை உடைத்து, போலீசாருடன் மோதிக் கொண்டு, பல்வேறு இடங்களிலிருந்து நகரத்திற்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டு, கொடிக் கம்பத்தில் ஏறி தேசியக் கொடியை கழற்றிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

மேலும் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது ஐ.டி.ஓவில் தனது டிராக்டர் கவிழ்ந்ததில் எதிர்ப்பு தெரிவித்த விவசாயி ஒருவர் உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். விவசாயிகள் சடலத்தை மூவர்ணத்தில் போர்த்தி ஐ.டி.ஓ கிராசிங்கில் வைத்திருந்தனர். அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீஸை அனுமதிக்கவில்லை.

“நாங்கள் இறுதியாக நான்கு மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் நுழைந்தோம். எங்கள் மனநிலை தெளிவாக உள்ளது, நாங்கள் தங்குவதற்கு இங்கு வந்துள்ளோம். நாங்கள் தொடங்கிய இடத்திற்குச் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.” என்று எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயியான 62 வயதான அமர்ஜீத் சிங் கூறினார்.

Views: - 0

0

0