டெல்லியில் மோசமான வானிலை: டிராக்டர் பேரணியை ஒத்திவைத்த விவசாயிகள்..!!

Author: Aarthi
6 January 2021, 8:49 am
tractor rally - updatenews360
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

இதனிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதுகுறித்து அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தனர். ஆனால் டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தலைவர்கள் சுவராஜ் அபியன், யோகேந்திர யாதவ் ஆகியோர் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக டிராக்டர் பேரணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தெரிவித்தனர். மேலும் வருகிற 28ம் தேதி பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக அரியானாவில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளும் டிராக்டர்களுடன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Views: - 47

0

0