ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல்..! மீண்டும் ஃபாரூக் அப்துல்லாவிடம் விசாரணை..! அமலாக்கத்துறை அதிரடி..!

21 October 2020, 12:53 pm
Farooq_Abdullah__Updatenews360
Quick Share

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பல கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பண மோசடி விசாரணை தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா இந்த வாரம் இரண்டாவது முறையாக அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜரானார். இந்த வழக்கில் 82 வயதான ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டார்.

முன்னதாக கடந்த திங்களன்று விசாரித்த பின்னர், அப்துல்லா தான் இது குறித்து கவலைப்படவில்லை என்றும் விசாரணையில் ஒத்துழைப்பேன் என்றும் கூறியிருந்தார்.

ஜம்மு காஷ்மீரின் பிரதான அரசியல் கட்சிகளான என்.சி மற்றும் பி.டி.பி உள்ளிட்டவை அப்துல்லாவின் இல்லத்தில் சந்தித்து குப்கர் பிரகடனத்திற்காக மக்கள் கூட்டணியை அமைத்த நான்கு நாட்களுக்குப் பிறகு கடந்த திங்களன்று அமலாக்கத்துறை விசாரணை நடந்த நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அப்போது தேசிய மாநாட்டுக் கட்சியினர் விமர்சித்தனர்.

அப்துல்லாவின் அறிக்கை கடந்த காலங்களைப் போலவே பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் பதிவு செய்யப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சண்டிகரில் அவர் முதல் முறையாக விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்துல்லாவின் பங்கைப் பற்றி அமலாக்கத்துறை கேள்வி எழுப்புவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது, பிசிசிஐ கொடுத்த நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறையின் வழக்கு சிபிஐ தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஏற்கனவே இது குறித்து சிபிஐ, முன்னாள் செயலாளர் முகமது சலீம் கான் மற்றும் முன்னாள் பொருளாளர் அஹ்சன் அகமது மிர்சா உள்ளிட்ட முன்னாள் ஜே.கே.சி.ஏ அலுவலக பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

அப்துல்லா, கான், மிர்சா மற்றும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க பொருளாளர் மிர் மன்சூர் கசான்ஃபர் அலி மற்றும் முன்னாள் கணக்காளர்களான பஷீர் அகமது மிஸ்கர் மற்றும் குல்சார் அகமது பீ ஆகியோருக்கு எதிராக சிபிஐ 2018’ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.

Views: - 12

0

0