மக்களே உஷார்..! நான்கு சக்கர வாகனம் இருக்கா..? ஜனவரி முதல் கட்டாயம்..!

8 November 2020, 12:24 pm
Fastags_UpdateNews360
Quick Share

டோல் கேட்களில் மின்னணு கட்டண வசூலை மேலும் அதிகரிக்க, 2021 ஜனவரி 1 முதல் பழைய வாகனங்கள் உட்பட அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக்குகளை கட்டாயமாக்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், டிஜிட்டல் மற்றும் ஐடி அடிப்படையிலான கட்டணங்களை ஃபாஸ்டாக்ஸ் மூலம் செலுத்துவதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டிசம்பர் 1, 2017’க்கு முன்பு விற்கப்பட்ட அனைத்து எம் மற்றும் என் வகை மோட்டார் வாகனங்களுக்கு (நான்கு சக்கர வாகனங்கள்)  சி.எம்.வி.ஆர், 1989’இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் 2021 ஜனவரி 1’ஆம் தேதிக்குள் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989’இன் படி, டிசம்பர் 1, 2017 முதல் புதிய நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்வதற்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் அல்லது அவற்றின் விநியோகஸ்தர்களால் இது கட்டாயமாக வழங்கப்படுகிறது.

போக்குவரத்து வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் பொருத்தப்பட்ட பின்னரே பிட்னெஸ் சான்றிதழ் புதுப்பித்தல் செய்யப்படும் என்று மேலும் கட்டளையிடப்பட்டது.

மேலும் தேசிய பெர்மிட் வாகனங்களுக்கு 2019 அக்டோபர் 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது, ”என்று கூறப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்துவது மின்னணு வழிமுறைகள் மூலமாக மட்டுமே டோல் பிளாசாக்களில் செய்யப்படுவதையும், வாகனங்கள் டோல் பிளாசாக்கள் வழியாக தடையின்றி கடந்து செல்வதையும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய படியாக இது பார்க்கப்படுகிறது.

Views: - 57

0

0