குழந்தை என்னோட ஜாடையே இல்ல.. யாரு கூட ‘படு…’ மனைவி மீதுள்ள சந்தேகத்தால் 2 மாத குழந்தையை கொன்ற தந்தை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2021, 11:48 am
Infant Murder -Updatenews360
Quick Share

ஆந்திரா : தன்னுடைய சாயலில் இல்லாத 2மாத பெண் குழந்தையை மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் படுகொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண துர்க்கம் நகரை சேர்ந்த மல்லிகார்ஜுனா, சிட்டம்மா தம்பதியருக்கு 2 மாத வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது.

இந்த நிலையில் குழந்தை தன்னுடைய சாயலும் இல்லை, தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் சாயலும் இல்லை. எனவே உன்னுடைய நடத்தை மீது சந்தேகம் எனக்கு உள்ளது என்று மல்லிகார்ஜுன அடிக்கடி சிட்டம்மாவுடன் தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று குழந்தையை அழைத்து கொண்டு 2 பேரும் மருத்துவமனைக்கு சென்று இருந்தனர். அப்போது அழுத குழந்தையை நான் தூக்கி வைத்துக் கொள்கிறேன் என்று கூறி வாங்கி சென்ற மல்லிகார்ஜுனா அருகிலுள்ள ஏரிக்கரைக்கு சென்று குழந்தையின் வாயில் பிளாஸ்டர் ஒட்டி மூச்சுத்திணற செய்து கொலை செய்தான்.

பின்னர் அந்த குழந்தையை பை ஒன்றில் வைத்து ஏரியில் வீசி விட்டான். குழந்தையுடன் கணவன் காணாமல் போனதால் சந்தேகமடைந்த சிட்டம்மா இதுபற்றி போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அனந்தபூரில் மல்லிகார்ஜுனவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவுக் குழந்தை தன்னுடைய சாயலிலும் இல்லை, தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் சாயலிலும் இல்லை.எனவே அதனை கொலை செய்தேன் என்று கூறினான்.

குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Views: - 277

0

0