இந்தியா டுடே நிருபரைத் தாக்கிய போதைப்பொருள் வியாபாரியின் தந்தை..! வைரலாகும் வீடியோ..!
2 September 2020, 6:26 pmஅதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவத்தில், ஆஜ் தக் செய்தி சேனலின் நிருபர் ஒருவர், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரி ஜைத் விலாத்ராவின் தந்தையால் தாக்கப்பட்டார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக மும்பையின் அந்தேரியைச் சேர்ந்த மற்றொரு போதைப் பொருள் விற்பனையாளரான ஜைத் விலாத்ராவை நேற்று இரவு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் கைது செய்தது.
அவரது சிடிஆர் பகுப்பாய்வு அவர் பசித் பரிஹார் மற்றும் சூர்யதீப் மல்ஹோத்ராவுடன் தொடர்பு கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது. இருவருக்கும் ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தியுடன் தொடர்பு உள்ளது. தவிர, ஷோயிக் போதைப்பொருள் நுகர்வு மற்றும் கொள்முதல் தொடர்பாக இருவருடனும் உரையாடல் மேற்கொண்டதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் சுஜாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தங்கள் மகனைக் கைது செய்வது குறித்து அவரது பெற்றோரின் எதிர்வினையைக் கோரி, ஆஜ் தக் பத்திரிகையாளர் ஜைதின் வீட்டிற்கு வெளியில் இருந்து அறிக்கை அளித்து வந்தார். இருப்பினும், ஆரம்பத்தில் ஆஜ் தக் நிருபரின் கேள்விக்கு பதிலளிக்காமல் கதவை மூடியபின், ஜைதின் தந்தை கதவைத் திறந்து, பத்திரிகையாளரை ஆக்ரோஷமாகத் தள்ளி, அவரைத் துஷ்பிரயோகம் செய்தார்.
“நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். புரிந்து கொள்ளுங்கள். இங்கிருந்து வெளியேறுங்கள்.” என ஆஜ் தக் நிருபரைத் தள்ளும்போது ஜைதின் தந்தை பயங்கரமாக எச்சரித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
0
0