பப்ஜி விளையாட்டால் அடுத்தத்து தற்கொலை.. ரூ.3 லட்சம் கொடுக்க தந்தை மறுத்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை!!

By: Udayachandran
10 October 2020, 8:07 pm
PUB G Dead- Updatenews360
Quick Share

திருப்பதி : பப்ஜி கேம் விளையாட 3 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க தந்தை மறுப்பு தெரிவித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் உள்ள பிடிஆர் காலனியை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் தேஜோஸ். இரவு பகல் பாராமல் தேஜோஸ் பப்ஜி கேம் விளையாடும் வழக்கத்தை கொண்டிருந்தார். பப்ஜி விளையாட்டிற்கு ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் ஆன்லைன் லிங்க் மூலம் பப்ஜி விளையாட்டில் இளைஞர்கள் ஆந்திராவில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
இந்தநிலையில் பப்ஜி விளையாட வதற்கு தேவையான துப்பாக்கி வாங்க மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டு தேஜோஸ் தந்தை பாஸ்கருக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

தேஜோஸ் தந்தை மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுக்க மறுத்து விட்ட காரணத்தால் இன்று தேஜோஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றிய தகவல் இருந்து திருப்பதி போலீசார் விரைந்து சென்று தேஜோஸ் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 56

0

0