பிப்.,10ல் மத்திய அமைச்சரவை கூட்டம் : விவசாயிகள் போராட்டம் குறித்து முக்கிய முடிவு..!!!
8 February 2021, 8:21 pmQuick Share
டெல்லி : விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரும் ஜன.,29ம் தேதி முதல் பிப்., 15ம் தேதி வரையும், மார்ச் 8 முதல் ஏப்., 8 வரையும் என இரு அமர்வுகளாக நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் காணொளி வாயிலாக நாளை மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு நடக்கவிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாடு, விவசாயிகளின் போராட்டம், கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளின் அமளி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
Views: - 0
0
0