வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. இறக்குமதி: தடை விதித்து மத்திய அரசு உத்தரவு…!!

Author: Aarthi
16 October 2020, 11:47 am
ac and cg - updatenews360
Quick Share

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த ஜுன் மாதத்தில் கார்கள், லாரிகள், மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் சில நியூமேடிக் டயர்களை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்திருந்தது. அதற்கு முன்னதாக டிவி முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

அடுத்தகட்டமாக,ஏ.சி. மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப தர கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில், இறக்குமதியை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து இறக்குமதி கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 40

0

0