டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு பெண் உயிரிழப்பு : மும்பையில் பதிவான முதல் இறப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2021, 12:39 pm
Mumbai Delta Plus Dead - Updatenews360
Quick Share

மும்பை : டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மும்பையில் முதல் இறப்பு பதிவாகியிருக்கிறது.

மும்பையில் 63 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜூலை 21-ஆம் தேதி அன்று, டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணுக்கு நீரிழிவு உட்பட பல நோய்த்தொற்றுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் ரத்னகிரியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மரணத்துக்கு பிறகு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு காரணமாக மகாராஷ்டிராவில் பதிவாகும் இரண்டாவது மரணம் இதுவாகும்.

மும்பை நகரத்தில் இதுவரை டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உயிரிழந்த இந்த பெண் உட்பட 7 பேருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் டெல்டா பிளஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 167

0

0