ஒரே மாவட்டத்தில் 130 குழந்தைகள் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி: கொரோனா பாதிப்பு?…மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி..!!

By: Aarthi
14 September 2021, 1:44 pm
Quick Share

மேற்குவங்கம்: ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று குழந்தைகளை பாதிப்பது திடீரென அதிகரித்துள்ளதால் மிகுந்த கவனம் தேவை என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2021 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் குழந்தைகளை தொற்று தாக்குவது திடீரென அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் தொற்று பாதிப்பு 2.80 சதவீதத்தில் இருந்து 7.04 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புக்குள்ளாகும் 100 பேரில் 7 பேர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருப்பதாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல பாதிப்புகளுடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலைமை மிக கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனாவின் 3வது அலை பாதிப்பு குழந்தைகளை அதிகம் பாதிக்க கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தைகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Views: - 165

0

0