பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்., காரணம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Author: kavin kumar
16 August 2021, 9:31 pm
Nirmala_Sitharaman_UpdateNews360
Quick Share

டெல்லி: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-“2007 மற்றும் 2008 ஆகிய வருடங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தைத் தொட்டது. அந்த சமயத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடாது என்பதற்காக மன்மோகன் சிங் அரசு மானியம் அளிக்க முடிவுசெய்தது. ஆனால் மானியம் அளிப்பதற்கான தொகை அப்போது அரசின் கைவசம் போதிய அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பத்திரங்களாக 1.3 லட்சம் கோடி ரூபாய் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டது.இந்த தொகையை வட்டியுடன் செலுத்திமுடிக்க 2026ஆம் ஆண்டுவரை ஆகும் எனக் கணக்கிடப்பட்டது. எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70,195 கோடி செலுத்தியிருக்கிறது.மேலும், 2026 வரை ரூ.37,000 கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால் எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை” என நிர்மலா சீதாராமன் விளக்கமளித்திருக்கிறார்.

Views: - 262

0

0