பெங்களூருவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து…!!

10 November 2020, 1:17 pm
bangalore fire - updatenews360
Quick Share

பெங்களூரு பாபுஜி நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள பாபுஜி நகரில் ஒரு வேதியியல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்களிலேயே தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.

தீ பரவியதன் காரணமாக வெகு உயரத்திற்கு வானத்தில் அடர்த்தியான புகை எழுந்தது. இரசாயன தொழிற்சாலை மக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், அங்குள்ள அனைவரையும் வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட போது சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அங்கிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியே ஓடி வந்தனர். இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தீ விபத்தில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 18

0

0